2025 மே 09, வெள்ளிக்கிழமை

காத்தான்குடி நகர சபையில் இரு புதிய உறுப்பினர்கள் நியமனம்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2019 ஒக்டோபர் 02 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி நகர சபையில் வெற்றிடமாகியுள்ள இடங்களுக்கு மர்சூக் அஹமட் லெவ்வை, ஏ.எல்.எம்.அக்பர் (நௌபர்) ஆகிய இரு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா முஸ்லில் காங்கிரஸ் சார்பிலான முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பினுடைய புதிய உறுப்பினர்களாக இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காத்தான்குடி நகர சபையில் உறுப்பினர்களாக இருந்த பொறியியலாளர் சிப்லி பாறூக், யு.எல் .எம்.முபீன் ஆகிய இருவரும் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்ததையடுத்து, அந்த வெற்றிடங்களுக்கு இவ்விருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களது பெயர்களும் தேர்தல் ஆணையாளரால் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளன.

காத்தான்குடி நகர சபையில் ஸ்ரீ லங்கா முஸ்லில் காங்கிரஸ் சார்பிலான முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பெண் உறுப்பினர் ஒருவர் உட்பட 03 உறுப்பினர்கள் உள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X