2025 மே 07, புதன்கிழமை

காத்தான்குடி நகர சபை பிரிவில் அனைத்தும் ஸ்தம்பிதம்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2020 மார்ச் 15 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

காத்தான்குடி நகர சபைப் பிரிவிலுள்ள அனைத்துப் பிரத்தியேக கல்வி நிலையங்கள், குர்ஆன் மதரசாக்கள், அரபுக்கல்லூரிகள் அனைத்தும்  மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் இலங்கையிலும் அடையாளம் காணப்படுள்ளதால் அது தொடர்பான அச்சம் ஏற்பட்டுள்ளதையடுத்து, காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் மேற்படி அறித்தலை விடுத்துள்ளார்.

இம்மாம் 20ஆம் திகதி வரை இவைகளை மூடுமாறும், காத்தான்குடி நகர சபை தவிசாளர் அஸ்பர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதேபோன்று, மறு அறிவித்தல்வரை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபம், ஏனைய பொது மைதானங்களில் இடம்பெற இருந்த சகல நிகழ்வுகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும், தவிசாளர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X