Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 மே 09 , பி.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
காத்தான்குடி, மீரா பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்களைத் தெரிவுசெய்யும் நோக்கில், தேர்தலொன்றை நடத்த வேண்டியிருப்பதாக, முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களத்தின் கிழக்குப் பிராந்திய காரியாலயம் தெரிவித்துள்ளது.
மீரா பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில், முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களத்தின் கிழக்குப் பிராந்திய காரியாலய அதிகாரிகளின் பிரசன்னத்துடன், எதிர்வரும் 13ஆம் திகதி காலை 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணிவரை, இத்தேர்தல் இடம்பெறவுள்ளது.
மேற்படி பள்ளிவாசல் நிர்வாகத்துக்குத் தெரிவுசெய்யப்படவுள்ள நிர்வாகத்தினர் 21 பேருக்காக, 55 பேர் போட்டியிடுகின்றனர்.
இவர்களைத் தெரிவுசெய்வதற்காக, அந்தப் பள்ளிவாசல் பரிபாலனத்துக்குட்பட்ட சுமார் 2,000 பேர் (ஜமாஅத்தார்) வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
வழமையாக பாரம்பரிய முறைப்படி நிர்வாகத்தினர் கூடி புதிய நிர்வாகத்தை பிரேரித்து ஆமோதிக்கும் முறை அல்லது ஏகோபித்த அல்லது பெரும்பான்மை ஆதரவின்படி தெரிவுசெய்யும் வழிமுறை பின்பற்றப்பட்டு வந்தபோதும், 2017ஆம் ஆண்டிலிருந்து, தேர்தல் மூலம் நிர்வாகத்தினர் தெரிவுசெய்யப்பட்டு வருகின்றனர்.
பாரம்பரிய முறைமையிலான நிர்வாகத் தெரிவில் எழும் சிக்கல்கள், செல்வாக்குச் செலுத்துதல்கள், அழுத்தங்கள் என்பனவற்றைத் தவிர்த்துக் கொள்ளும் வகையிலேயே, இவ்வாறு வெளிப்டையான தேர்தலின் மூலம் நிர்வாகத் தெரிவு இடம்பெறவுள்ளதென, முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களத்தின் காத்தான்குடியிலுள்ள கிழக்குப் பிராந்திய காரியாலயம் தெரிவித்துள்ளது.
50 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
2 hours ago