2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கான்ஸ்டபிள் உயிரிழப்பு

ஆர்.ஜெயஸ்ரீராம்   / 2018 மார்ச் 27 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமைபுரியும் பொலிஸ் கான்ஸ்டபிளான குருணாகல் பிரதேசத்தைச் சேர்ந்த உபுல்ரஞ்சித் கலேகே (வயது 42) என்பவர், தான் தங்கியிருந்த அறையிலிருந்து நேற்று (26) மாலை சடலமாக மீட்கப்பட்டாரென, வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.

 

குறித்த கான்ஸ்டபிள், மாலை நேரமாகியும் கடமைக்கு சமுகமளிக்காமையால் பொலிஸார், அவரது அறைக்குச் சென்று பார்த்த போது, உறங்கிய நிலையில் உயிழந்து காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர், மாரடைப்பின் காரணமாக உயிரிழந்திருக்கலாமெனச் சந்தேகிப்பதுடன், இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X