Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஓகஸ்ட் 24 , பி.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.திவாகரன்
மண்முனை தென்மேற்கு பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இடம்பெறும் கால்நடைகள் தொடர்பிலான பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக, கால்நடைகளுடன் தொடர்புடைய திணைக்களங்களின் அதிகாரிகள், பொலிஸார், பண்ணையாளர்கள், வியாபாரிகள் ஆகியோருக்கு இடையில் ஒன்றுகூடலை ஏற்படுத்துவது என, மண்முனை தென்மேற்கு பிரதேச சபையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேற்படி சபையின் மாதாந்த அமர்வு, அதன் தவிசாளர் சி.புஸ்பலிங்கம் தலைமையில், இன்று (24) நடைபெற்றது. இதன்போதே, மேற்படித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பிரதேசத்தில் கட்டாக்காலி மாடுகளால் ஏற்படும் அசௌகரியங்கள், சட்டவிரோத மாடு கடத்தல் போன்ற பிரச்சினைகளைத் தீர்க்கும் நோக்கில் இவ்வொன்றுகூடலை நடத்தவுள்ளதாக, அமர்வில் கூறப்பட்டதுடன், பிரதேசசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளினால் கொண்டு செல்லப்படும் மண் மற்றும் மாடுகளுக்கான வரி அறவீடு தொடர்பிலும் இதன்போது, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் பிரதேசத்தில் ஏற்பட்டிருக்கின்ற வரட்சி காரணமாக, குடிநீருக்கு பல கிராமங்களில் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும், இவ்வற்றை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு, நீர்த்தாங்கிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
எனினும், சில கிராமங்களுக்கு இன்னமும் குடிநீர் தேவையாகவுள்ளதாக சபை உறுப்பினர்களால் கூறப்பட்டதோடு, அதற்கான விரைவு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தவிசாளர் குறிப்பிட்டார்.
குடிநீர் தொடர்பிலான பிரச்சினைகளை குறித்த வட்டாரங்களில் உள்ள சபை உறுப்பினர்களை கண்காணிக்குமாறும் தீர்மானம் இதன்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
8 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago