ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2017 ஒக்டோபர் 25 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
யோகா கலையின் சிறப்பை உணர்த்தும் முகமாக மட்டக்களப்பில் யோகா கலையை பிரபல்யப்படுத்தும் நோக்குடனும் கிராமங்கள் தோறும் யோகா ஆரோக்கிய நிலையங்கள் திறக்கப்பட்டு வருவதாக, யோகா ஆரோக்கிய இளைஞர் கழக செயலாளரும் யோகா கலை பயிற்சியாளருமான எல். தீபாகரன் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர்,
“தற்போதைய இயந்திர மற்றும் இலத்திரனியல் யுகத்தில் பல்வேறு உடல், உள ஆரோக்கியக் கேட்டை மனிதர்கள் குறிப்பாக இளைஞர், யுவதிகள் எதிர்கொள்ள நேரிடுகிறது.
“இதனைக் கருத்தில்கொண்டு சுய அமைதி மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக இத்தகைய யோகா கலை பயிற்சி நிலையங்களைத் திறந்து பயற்சியளிக்கப்படுகிறது.
“இதனடிப்படையில், மட்டக்களப்பு ஜெயந்திபுரத்தில் எதிர்வரும் சனிக்கிழமை (28) ஜனாகேசா யோகா ஆரோக்கிய வாழ்வுக் கழகப் பயிற்சி நிலையம் திறந்து வைக்கப்படவுள்ளது.
“இதில் வார நாட்களில் காலை 5.30 தொடக்கம் காலை 6.30 மணிவரையும், வார இறுதி நாட்களில் காலை 7 மணி தொடக்கம் காலை 8 மணிவரையிலும் இலவசமாக யோகா ஆரோக்கிய வாழ்வுக் கலைப் பயிற்சிகள் இடம்பெறவுள்ளன.
“மட்டக்களப்பில் ஏற்கெனவே யோகா கலை விற்பன்னர் கலாபூஷணம் செல்லையா துரையப்பாவின் வழிநடத்தலில் நாவற்குடா, பூம்புகார், கூழாவடி, கொக்குவில், முறகொட்டான்சேனை ஆகிய இடங்களில் யோகா பயிற்சி நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன” என்றார்.
5 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
7 hours ago