Janu / 2024 டிசெம்பர் 30 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்ட கிராம உத்தியோகத்தர்கள் திங்கட்கிழமை (30) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மட்டக்களப்பு காந்தி பூங்கா சதுக்கத்தில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சில நாட்களுக்கு முன்னர் கோறைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நாசிவன்தீவு பகுதி கிராம உத்தியோகத்தர் தாக்கப்பட்டதை கண்டித்தும், தாக்கியவர்களை கைது செய்யக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று அண்மையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தியாவட்டவான் கிராம உத்தியோகத்தர் ஒருவரும் தாக்கப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிராம உத்தியோகத்தர்கள் தங்களது கடமைகளை அச்சுறுத்தல் இன்றி மேற்கொள்ள வேண்டியும், தாக்கியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எச்.எம்.எம்.பர்ஸான்

23 minute ago
24 minute ago
28 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
24 minute ago
28 minute ago
35 minute ago