2025 மே 09, வெள்ளிக்கிழமை

‘கிராம மக்களிடையே சேவைகள் சென்றடையவில்லை’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 ஒக்டோபர் 03 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச அமைப்புகளும் அரச சார்பற்ற அமைப்புகளும் பலமாக இருந்த போதிலும் அடி நிலையிலுள்ள கிராம மக்களிடையே அவற்றின் சேவைகள் இன்றுவரை சென்றடையவில்லை என, மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளரும் சட்டத்தரணியுமான மயூரி ஜனன் தெரிவித்தார்.

அரச அலுவலகங்களில் கடமை புரிகின்ற உள நல ஆற்றுகையாளர்களுக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள சிவில் சமூக மட்ட அமைப்புகளில் பணிபுரிகின்ற செயற்பாட்டாளர்களுக்குமாக நடைபெறும் ஒரு வார கால வதிவிடப் பயிற்சி நெறியில் நேற்று (02) கலந்துகொண்டு அவர் கருத்துத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து சமகால சமூக நிலைபற்றித் தெளிவுபடுத்திய அவர், 30 வருட கால யுத்தனம், தொடர்ச்சியான இடப்பெயர்வுகளால் அடி நிலையிலுள்ள கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனவென சுட்டிக்காட்டிய அவர், பெண்களின் கல்வியறிவு தேசிய ரீதியில் ஒப்பிடும்பொழுது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மிகவும் பின்னடைந்திருந்திருப்பதாகத் தெரிவித்தார்.

அதேவேளை, மட்டக்களப்பு மாவட்டம் வறுமை மாவட்டங்களின் தெரிவில் முதலிடமாகவும் இருப்பதாகவும் இத்தகைய அரசியல், சமூக, பொருளாதார பின்னணிகளில் பெண்களும் சிறார்களும் பல வகையான துன்புறுத்தல்களுக்கும் ஆளாகியுள்ளனர் என்றார்.

இவற்றுக்கெல்லாம் சட்ட ரீதியான சமூக ரீதியான தீர்வுகளை எட்டுவதற்காக இந்தப் பிரச்சினைகள் சரியான முறையிலே அடையாளம் காணப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X