Princiya Dixci / 2021 ஏப்ரல் 28 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
கிழக்கு மாகாணத்தில் கடந்த 12 மணித்தியாலத்தில் 95 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமணையினால் இன்று (28) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 12 மணித்தியாலத்துக்குள் தெஹியத்தக்கண்டிய சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 29 பேரும், உகன சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 18 பேரும், அம்பாறை சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 10 பேரும், திருகோணமலை சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 10 பேரும், மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 05 பேரும், செங்கலடி சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 04 பேரும் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், வவுனதீவு, களுவாஞ்சிக்குடி ஆகிய சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகளில் தலா 03 பேரும், தமன, கந்தளாய் மற்றும் ஓட்டமாவடி ஆகிய சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகளில் தலா 02 பேரும், பொத்துவில், லகுகல, வாழைச்சேனை, காரைதீவு, கல்முனை வடக்கு, கிண்ணியா, கொமரன்கடவல ஆகிய சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகளில் தலா 01 பேருமாக, மொத்தம் 95 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அம்பாறை, மட்டக்களப்பு, கந்தளாய், தெஹியத்தக்கண்டி, உகன, திருகோணமலை, உப்புவெளி ஆகிய 07 சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகள் மிகவும் அவதானத்துக்குரிய பிரதேசங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 1,505 பேரும், அம்பாறை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 483 பேரும், மட்டக்களப்பு சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 1,037 பேரும், திருகோணமலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 1,188 பேரும் அடங்கலாக கிழக்கு மாகாணத்தில் 4,213 பேருக்கு கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 minute ago
15 minute ago
22 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
15 minute ago
22 minute ago
26 minute ago