Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Princiya Dixci / 2020 நவம்பர் 30 , பி.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகா, எம்.எஸ்.எம்.நூர்தீன், பி.எம்.எம்.ஏ.காதர்
கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 223ஆக அதிகரித்துள்ளதாக கிழக்கு சுகாதாரத் திணைக்கள தகவல் மையம் தெரிவிக்கின்றது.
நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றாளர்களால் கிழக்கின் நிலைமை மோசமாகிக்கொண்டுவருகிறது. தொற்றுக்குள்ளான 223 பேரும் 5 சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இவர்களில் பேலியகொட, மினுவாங்கொட கொத்தணி மூலமாக 200 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். ஏனைய இடங்கள் மூலமாக 23 பேரும் தொற்றுக்கிலக்காகியுள்ளனர்.
பேலியகொட கொத்தணி மூலாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 88 பேரும் கல்முனை பிராந்தியத்தில் 86 பேரும் திருகோணமலை மாவட்டத்தில் 16 பேரும் அம்பாறை பிராந்தியத்தில் 10 பேரும் தொற்றுக்கிலக்காகியுள்ளனர்.
கிழக்கிலுள்ள ஐந்து கொரோனா சிகிச்சை நிலையங்களில் தற்போது 449 கொரோனாத் தொற்றாளர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இன்று (30) வரை 1,214 பேர் மேற்படி 5 வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு, அவர்களில் 760 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 5 பேர் இடமாற்றப்பட்டுள்ளனர். இன்னும் 14 கட்டில்களே எஞ்சியுள்ளன.
காத்தான்குடி சிகிச்சை நிலையத்தில் நேற்று வரை 463 பேர் அனுமதிக்கப்பட்டு, 314 பேர் குணமடைந்து வெளியேறியதால், தற்போது 146 பேர் தங்கியிருந்து சிகிச்சைபெற்று வருகின்றனர். மூவர் இடமாற்றப்பட்டிருந்தனர்.
மேலும், ஈச்சிலம்பற்று சிகிச்சை நிலையத்தில் 56 பேரும் கரடியனாறு சிகிச்சை நிலையத்தில் 101 பேரும் பதியத்தலாவ சிகிச்சை நிலையத்தில் 67 பேரும் பாலமுனை சிகிச்சை நிலையத்தில் 79 பேரும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
கிழக்கு மாகாணத்தில் இதுவரை சந்தேகத்துக்கிடமான 12,122 பேரில் 445 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
12 minute ago
16 minute ago
24 minute ago