Princiya Dixci / 2020 டிசெம்பர் 01 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தாளமுக்கம் நாளை (02) மாலை திருகோணமலை ஊடாக சூறாவளி ஊடறுக்கும் போது, கடல் கொந்தளிப்பாக இருக்கும். எனவே, மீனவர்கள் மற்றும் கரையோரப் பிரதேசங்களில் இருக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு, வளிமண்டல திணைக்கள மட்டக்களப்பு அதிகாரி சுப்பிரமணியம் ரமேஷ் தெரிவித்தார்.
கிழக்கில் ஏற்பட்டுள்ள வானிலை மாற்றம் தொடர்பாக இன்று (01) அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்திற்கு அருகிலும் தென் கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்திற்கு மேலாகவும் காணப்படுகின்ற தாளமுக்கமானது கடந்த 6 மணித்தியாலயங்களில் மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு திசை நோக்கி நகர்ந்து தென் மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்படுகின்றது.
“இது தற்போது திருகோணமலையில் இருந்து கிழக்கு தென்கிழக்காக 530 கிலோமீட்டர் தூரத்திலும் கன்னியாகுமரியில் இருந்து கிழக்கு தென் கிழக்காக 930 கிலோமீட்டர் தூரத்திலும் காணப்படுகின்றது. இது அடுத்துவரும் வரும் 24 மணித்தியாலத்தில் சூறாவளியாக வலுவடைந்து திருகோணமலை பிரதேசத்திற்கு 2ஆம் திகதி (நாளை) மாலை அல்லது இரவு வேளையில் ஊடாக ஊடறுக்கும் என என எதிர்பார்க்கப்படுகின்றது” எனவும் அவர் தெரிவித்தார்.
“இச்சந்தர்ப்பத்தில் கிழக்கு, வடக்கு, வட மத்திய, ஊவா மாகாணங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30 தொடக்கம் 40 கிலோ மீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனவே, இத்தருணத்தில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் மீனவர்கள் மற்றும் கரையோரப் பிரதேசங்களிலுள்ள மக்கள் அவதானமாக நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.
(கனகராசா சரவணன், ரீகே.றஹ்மத்துல்லா, வி.சுகிர்தகுமார், எஸ்.கார்த்திகேசு, எஸ்.எம்.இர்சாத், ரீ.எல்.ஜவ்பர்கான், ஏ.எல்.எம். ஷினாஸ், அஸ்லம் எஸ்.மௌலானா, அ.அச்சுதன், பாறுக் ஷிஹான், வ.சக்தி)
21 minute ago
36 minute ago
39 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
36 minute ago
39 minute ago
54 minute ago