2025 மே 09, வெள்ளிக்கிழமை

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்களின் கவனயீர்ப்புப் போராட்டம்

கே.எல்.ரி.யுதாஜித்   / 2019 செப்டெம்பர் 30 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற்று வரும் பல்கலைக்கழக ஊழியர்களது வேலை நிறுத்தப்போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், மட்டக்களப்பு - வந்தறுமூலையிலுள்ள கிழக்குப் பல்ககலைக்கழகத்தின் முன்னால், கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள், இன்று (30) காலை கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்துக்கு அரசாங்கத்தால் இன்னமும் தீர்வு வழங்கப்படவில்லை என்று தெரிவித்த கிழக்குப் பல்கலைககழக ஊழியர் சங்கத்தின் தலைவர் ஏ.ஜெகராஜு, தம்முடைய நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் போராட்டம் தொடரும் அல்லாவிட்டால் போராட்ட வடிவங்கள் மாற்றமடையும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X