Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஒக்டோபர் 01 , பி.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா சபேஷ்
கிழக்குப் பல்கலைக்கழத்தின் 26 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா மட்டக்களப்பு வந்தாறு மூலை வளாகத்தின் நல்லையா மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
இப்பட்டமளிப்பு விழா ஆரம்ப நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் வாக்லே கலந்துகொண்டதுடன் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் ந. பஞ்சநதமும் பங்கேற்றார்.
கிழக்குப் பல்கலைக்கழகம் அதன் 42 ஆவது ஆண்டினைப் பூர்த்தி செய்யும் வேளையில் இப்பட்டமளிப்பு விழா நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இம்முறை வெளிவாரி மற்றும் உள்வாரியாக கல்வி நெறிகளைப்பூர்த்தி செய்துள்ள 2506 பேர் பட்டம் பெறுகின்றனர்.
கலாநிதி, முதுதத்துவமாணி, விவசாய, விஞ்ஞான முதுமாணி, முதுகலைமாணி, முதுகல்விமாணி, வணிக நிருவாகத்தில் முதுமாணி, அபிவிருத்திப் பொருளியல் முதுமாணி, முகாமைத்துவ பட்டப்படிப்பின் டிப்ளோமா மற்று இளமாணி உட்பட 1247 பேருக்கு முதல் நாள் பட்டம் வழங்கப்பட்டது.
இரண்டாம் நாள் விழாவின்போது 1259 பேர் பட்டம் பெற்றனர்.
கிழக்குப்பல்கலைக்கழக வரலாற்றில் முதல்தடவையாக தொழில்நுட்பபீட மாணவர்களுக்கான விவசாய தொழில் நுட்பம் மற்றும் முயற்சியான்மையில் உயிர் முறைமைகள் தொழில் நுட்ப இளமாணி பட்டம் வழங்கப்பட்டது. (R)
0
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
5 hours ago