2025 மே 24, சனிக்கிழமை

கிழக்கு பட்டதாரிகளை உள்ளீர்க்கும் வயதெல்லை 45 என அறிவிக்கப்பட்டது

Editorial   / 2017 ஓகஸ்ட் 09 , பி.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், வடிவேல் சக்திவேல்

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித பொகொல்லாகம ஆகியோருக்கிடையில், இன்று (09) இடம்பெற்ற சந்திப்பின் பின்னர், கிழக்கு பட்டதாரிகளை உள்ளீர்க்கும் வயதெல்லை 45 என, அறிவிக்கப்பட்டது. 

இதனடிப்படையில், தற்போது கிழக்கு மாகாண சபையால் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப கோரப்பட்டிருக்கும் வெற்றிடங்களுக்கு 45 வயதான பட்டதாரிகளும் விண்ணப்பிக்க தகுதிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஏற்னெவே விடுக்கப்பட்ட சுற்றறிக்கைக்கு அமைய 21 தொடக்கம் 35 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளை விண்ணப்பிக்குமாறு கோரப்பட்டிருந்தது. வடக்கு, கிழக்கில் யுத்தம் மூலம் பலர் தமது குறித்த வயதுக் காலப்பகுதியில் பட்டப்படிப்பை பூர்த்திசெய்வதில் பல்வேறு தடங்கல்களை எதிர்நோக்கியிருந்தனர். 

நியமன வயதுப் பிரச்சினை குறித்து, பட்டதாரிகள் முதலமைச்சரிடம் முறையிட்டிருந்த நிலையில், கிழக்கு மாகாண முதலமைச்சர் பல தடவைகள் இது தொடர்பில் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்திருந்தார். 

இந்நிலையிலேயே,  நியமன வயதெல்லை 45 ஆக மாற்றப்பட்டுள்ளது. கிழக்கில் உள்ள 4,000  மேற்பட்ட பட்டதாரிகளுக்கான தொழில்வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் முதற்கட்டமாக, 1,700 பட்டதாரிகளை உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான நியமனங்களும் விரைவில் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X