2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கிழக்கு மாகாணத்துக்கான புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவியேற்பு

Editorial   / 2017 ஓகஸ்ட் 24 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். பாக்கியநாதன், ரீ.எல்.ஜவ்பர்கான்

கிழக்கு மாகாணத்துக்கான புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபராக எச்.டீ.கே.எஸ். ஜெயசேகர, தனது கடமையைப் பொறுப்பேற்கும் வைபவம், மட்டக்களப்பு லேடி மெனிங் ரைவிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை (24) நடைபெற்றது. 

கிழக்கு மாகாணத்துக்கான பிரதிப் பொலிஸ் மா அதிபராகக் கடமை புரிந்த சுமித் எதிரிசிங்க ஓய்வு பெற்றுச் சென்றதையடுத்து பேலியாகொட பிரதிப் பொலிஸ் மா அதிபராக் கடமையாற்றிய வந்த ஜெயசேகர குறித்த பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டார். 

பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்ட அவர், மதத் தலைவர்களின் ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார். 

மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் கந்தளாய் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், மட்டக்களப்பு பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரிகள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .