2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

குளத்தில் மூழ்கி இருவர் பலி

Editorial   / 2018 ஓகஸ்ட் 29 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ஜெயஸ்ரீராம் எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு - பொலன்னறுவை ஜயந்தியாய குளத்தில் நீராடுவதற்குச் சென்ற ஏறாவூரை சேர்ந்த அரபுக் கல்லூரி மாணவர்கள் இருவர் இன்று (29) நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ளனரென வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

ஏறாவூர், பாக்கியத்துஸ்ஸாலிகாத் அரபு கல்லூரியை சேர்ந்த ஏழு மௌலவிகள் ஜயந்தியாய குளத்திற்கு குளிப்பதற்காக தோணியில் சென்றபோது, தோணி கவிழ்ந்ததில் அதில் பயணித்த நால்வரும் நீரிழ் மூழ்கியுள்ளனர், இவர்களில் இருவர் காப்பற்றப்பட்டதுடன், மற்றைய இருவரும் நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர், சகாத் கிராமத்தை சேர்ந்த ஏ.எம்.ஸாஹிர் (வயது -23), ஏறாவூர் மிச்நகரை சேர்ந்த யூ.எம்.சாதீக் (வயது – 22) ஆகிய மாணவர்கள் இருவரே உயிரிழந்துள்ளதுடன், வை.ரீ.எம்.இஸ்ஸத் (வயது – 22) என்பவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில், வாழைச்சேனை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X