Freelancer / 2022 ஜூன் 08 , பி.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எச்.எம்.எம்.பர்ஸான்)
குளவிகள் கொட்டியதில் இன்று புதன்கிழமை (8) வயோதிபர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை - 5 ஆம் வட்டாரம் உமர் வைத்தியர் வீதியைச் சேர்ந்த 74 வயதுடைய மீராலெப்பை அபுசாலி என்பவரே குளவி கொட்டி இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

வர்த்தக நிலையம் ஒன்றிற்கு சென்றிருந்த அந்த வயோதிபர் மீது கட்டடம் ஒன்றில் கூடமைத்திருந்த குளவிகள் கலைந்து கொட்டியதிலேயே அவர் மரணமடைந்துள்ளார்.
மேலும், மரணமடைந்த நபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
7 minute ago
16 minute ago
43 minute ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
16 minute ago
43 minute ago
20 Dec 2025