2025 மே 08, வியாழக்கிழமை

குளிர்சாதனப்பெட்டியை திறந்த போது மின்சாரம் தாக்கி தாய் பலி

Editorial   / 2022 செப்டெம்பர் 01 , பி.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

மின்சாரம் தாக்கி இளம் தாயொருவர் மரணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி மூன்றாம் வட்டாரம் மஸ்ஜிதுல் ஹைர் பள்ளிவாசல் வீதியிலுள்ள வீடொன்றிலே இந்த மரணச் சம்பவம் இன்று (1) மாலை இடம்பெற்றுள்ளது. 

குறித்த வீட்டுப் பெண்மணி குளிர்சாதனப்பெட்டியில் இருந்த பொருட்களை எடுக்க திறந்த போது குளிர்சாதனப்பெட்டியில் மின்னொழுக்கு ஏற்பட்டிருந்த காரணமாக மின்சாரம் தாக்கியதில் மரணமடைந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. 

இவ்வாறு மரணமடைந்தவர் இரண்டு பிள்ளைகளின் தாயான அபூபக்கர் பஸ்மியா (35 வயது) என்பவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X