Freelancer / 2023 ஏப்ரல் 28 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம்
மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மற்றும் அவரது இரண்டரை வயது மகள்மீது மிலேசத்தனமாக தாக்குதல் நடத்தியது தொடர்பில் தமிழரசுக்கட்சியின் போரதீவுப்பற்று இணைப்பாளர் நேற்று (27) கைதுசெய்யப்பட்டுள்ளார் என வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
வெல்லாவெளி கலைமகள் வித்தியாலய பாடசாலைக்கு முன்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயற்குழு உறுப்பினர் கோபாலன் பிரசாத், அவரது மனைவி மற்றும் குழந்தை ஆகிய மூவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது வழிமறித்து, நேற்றுப் பிற்பகல் 2.30க்கு மிலேசத்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த பிரசாத்தின் இரண்டரை வயது குழந்தை படுகாயமடைந்த நிலையில், மண்டூர் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், அங்கிருந்து மேலதிக சிசிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படும் தமிழரசி கட்சியின் போரதீவுப்பற்று இணைப்பாளர் வெல்லாவெளி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போரதீவுப்பற்று பிரதேச சபைக்கு போட்டியிடுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்படி சம்பவம் தொடர்பாக வெல்லாவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள். (N)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .