Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 08 , பி.ப. 07:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. விஜயரெத்தினம்
தமிழ்மக்களின் நீண்டகால கேள்விகளாகவும், ஆதங்கங்களையும் மற்றும் அரசியலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பில் தலைமைகளிடம் நேரடியான கேள்வி-பதில் நிகழ்வும் எதிர்வரும் திங்கட்கிழமை (12) காலை 9.00மணிக்கு களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் தமிழரசு கட்சியின் பட்டிருப்புத் தொகுதி தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்திரன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் அனைத்து விதமான கேள்விகளுக்கும்,சந்தேகங்களுக்கும் விளக்கம்,தெளிவுரையினை ஜனாதிபதி சட்டத்தரணியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் வழங்கவுள்ளார்.
அனைவரும் கலந்துகொண்டு தங்களுக்குரிய தேவையான விளக்கவுரைகளையும், விடயங்களையும் நேரடியாக கேட்க முடியுமெனவும் தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ,மங்கள விளக்கேற்றல், அகவணக்கத்துடன் வரவேற்புரையும் நடைபெறுமெனவும் தெிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
25 minute ago
31 minute ago
45 minute ago