Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Princiya Dixci / 2021 ஏப்ரல் 27 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.அஹமட் அனாம், க.சரவணன்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பிரதேசத்தில் வைத்து 1,850 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர், நேற்று (26) மாலை கைது செய்யப்பட்டுள்ளார் என வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஜய பெரமுன தெரிவித்தார்.
சந்தேகநபர் பயணித்த மோட்டார் சைக்கிளும் வாழைச்சேனை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், பிறைந்துரைச்சேனை தரிக்கா வீதியை சேர்ந்த 48 வயதுடையவர் எனவும் அவர் தெரிவித்தார்.
சந்தேகநபர், நீண்ட காலமாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர் என்று ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருவதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இவருடன் தொடர்புடைய பல நபர்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் வாழைச்சேனை பொலிஸாரால் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, வாழைச்சேனைப் பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே மேற்படி நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
19 minute ago
1 hours ago