Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
கனகராசா சரவணன் / 2020 மார்ச் 03 , பி.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு சிறைச்சாலையில் பாவனைக்குப் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட சிற்றுண்டிச்சாலை, கைதிகளுக்கான தங்குமிட அறைகள் உப்பட பல கட்டடங்கள் புனர்நிர்மானிக்ப்பட்டு, நேற்று (02) திறந்துவைக்கப்பட்டது.
மட்டக்களப்பு சிறைச்சாலையின் பதில் பிரதம ஜெயிலர் ஆர் .மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் சுஜீர விஜேசேகர, சிறைக்கைதிகளின் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் ராஜன் மயில்வாகனம் ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டு, மேற்படி புனர்நிர்மானிக்ப்பட்ட கட்டடங்களைத் திறந்துவைத்தனர்.
கைதிகளுக்கான சிற்றுண்டிச் சாலை, கைதிகளைப் பார்வையிட வருபவர்களுக்கான தங்குமிட அறை, அரச விருந்தினர்கள் வரவேற்பு அறை, மதவழிபாட்டுத் தலங்கள், கைதிகளுக்கான தொழிற் பயிற்சி தையல் நிலையம், சிகை அலங்கார நிலையம் , வைத்திய சிகிச்சை நிலையம் போன்றவை புனர்நிர்மானம் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், சிறைச்சாலைக் கட்டடத்துக்கான பாதுகாப்புக் கமெராக்களும் புதிதாகப் பொருத்தப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் சுஜீர விஜேசேகர மேற்கொண்ட முயற்சியின் காரணமாக, சிறைச்சாலையின் பதில் பிரதம ஜெயிலர் ஆர் .மோகன்ராஜ் வழிகாட்டலின் கீழ், சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் நிதிப் பங்களிப்புடன் இவை புனரமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு சிறைச்சாலை சிறைக்கைதிகளின் நலன்புரி சங்கத்தின் செயலாளர், பா.சுசிதரன் மற்றும் நலன்புரி சங்கத்தின் உறுப்பினர்கள் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், சிறைச்சாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
17 minute ago
35 minute ago
1 hours ago