Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Mayu / 2023 டிசெம்பர் 31 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல் ஜவ்பர்கான்
மனிதப் படுகொலை தொடர்பாக மரண தண்டனை வழங்கப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் கைதியின் மகளுக்கு மட்டக்களப்பு சிறைச்சாலை கைதிகள் நலன்புரி சங்கத்தினால் தையல் இயந்திரம் இன்று காலை(31) வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த மரண தண்டனை கைதி தனது மகளுக்கு வாழ்வாதார உதவி வழங்கும் படி சிறைச்சாலை திணைக்களத்தினூடாக விடுத்த வேண்டுகோளை அடுத்து மட்டக்களப்பு சிறைச்சாலை நலன்புரிச்சங்க உறுப்பினர்கள் தமது சொந்த நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட தையல் இயந்திரத்தை குறித்த இன்று காலை கையளித்தனர்.
மட்டக்களப்பு சிறைச்சாலை கைதிகள் நலன்புரி சங்கத்தின் தலைவர் எஸ். ராஜா தலைமையில் நடைபெற்ற தையல் இயந்திரம் கையளிப்பு வைபவபத்தில் சிறைச்சாலை அக்கியச்சகர் என். பிரபாகரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
அட்டாளைச்சைனைச் சேர்ந்த மேற்படி மரண தண்டனை கைதி மனித படுகொலை சம்பந்தமாக மரண தண்டனை வழங்கப்பட்டு தற்போது வெளிக்கடை சிலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
35 minute ago
43 minute ago
52 minute ago