2025 மே 19, திங்கட்கிழமை

கைவிரல் அடையாள பதிவு இயந்திர பயன்பாடு: ஜனாதிபதியிடம் மகஜர் கையளிக்க முஸ்தீபு

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2018 ஜனவரி 30 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கைவிரல் அடையாள பதிவு இயந்திர பயன்பாட்டை இரத்துச் செய்யுமாறு கோரும் மகஜர் ஒன்றை, தென்கிழக்கு ஆசிரியர் ஒன்றியம், நாளை(31) அம்பாறை மாவட்டத்துக்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேனவிடம் கையளிக்கவுள்ளதாக, ஒன்றியத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.அன்வர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“பொத்துவில் கோட்டப் பாடசாலகளிலும் வரவுகளை பதிவு செய்வதற்காக, கைவிரல் அடையாள இயந்திரத்தைப் பொருத்தி உள்ளனர். இதனால் பல பிரச்சினைகளை ஆசிரியர்கள் எதிர்நோக்குகின்றனர். இந்நிலையில், தமக்கு தீர்வொன்றைப்  பெற்றுத்தருமாறு கோரும் மகஜரை தென்கிழக்கு ஆசிரியர் ஒன்றியம்  ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளது” என்றார். 

அம்மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“கிழக்கு மாகாணத்திலுள்ள பெரும்பாலான பாடசாலைகளில் தற்போது இலத்திரணியல் கைவிரல் அடையாள இயந்திரம் பொருத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகின்றது.

நாங்கள் 7.30 மணிக்குள் பாடசாலைக்கு செல்ல வேண்டியதன் காரணமாக அதிகாலையிலேயே பிரயாணத்தை ஆரம்பிக்க வேண்டியுள்ளதன் காரணத்தால் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

“மாணவர்களின் கல்வி நிலையைக் கவனத்தில் கொண்டும் வெளியூர் ஆசிரியர்களின் மன உலைச்சலையும் தவிர்த்து, அவர்களது சேவையை திறம்பட தொடர்ந்து மேற்கொள்வதற்கு, கைவிரல் அடையாள இயந்திரத்தை இரத்து செய்ய வெண்டும்.

“அவ்வாறு கைவிரல் அடையாள இயந்திரத்தை இரத்துச் செய்ய முடியாதவிடத்து, பாதிக்கபட்டுள்ள ஆசிரியர்களை 20 கிலோமீற்றருக்கு உட்பட்ட பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இடமாற்றம் வழங்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X