Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2020 மார்ச் 11 , பி.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மட்டக்களப்பு மக்கள் அஜாக்கிரதையாக இருந்து விட முடியாது, வருமுன் காப்போம் எனும் முன்னாயத்த ஏற்பாடே சிறந்ததென, ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் பி.ஏ.டி.பி.எஸ். பொன்வீர தெரிவித்தார்.
பெற்றி கம்பஸில் ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுத் தடுப்பு நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து வருவோர் தங்கவைக்கப்பட்டுள்ள நிலைமையின் பின்னர் மட்டக்களப்பு பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அச்ச நிலை குறித்து ஆராயும் விசேட கூட்டம், ஏறாவூர் நகர சபை மண்டபத்தில் இன்று (11) நடைபெற்றது.
ஏறாவூர் நகர சபைத் தலைவர் இறம்ழான் அப்துல் வாஸித் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கூட்டத்தில், பிரதேச வைத்தியர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், நகர சபை உறுப்பினர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதன்போது கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்குரிய ஆகக் கூடிய முன்னாயத்த நடவடிக்கைகள் குறித்தும் வைத்தியர் பொன்வீர தெளிவுபடுத்தினார்.
அவர் மேலும் கூறியதாவது, “கொரோனா உயிர்க்கொல்லி வைஸை் குறித்து மக்கள் உயர்ந்தபட்ச முன்னாயத்த தற்காப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமெனவும் இது குறித்து உள்ளூராட்சி மன்றங்கள் , அமைப்புகள் என்பன விரைந்து விழிப்புணர்வூட்டல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.
“கைகளைக் குறைந்தபட்சம் 22 செக்கன்களாவது சவர்க்காரமிட்டுக் கழுவிவுதல் வேண்டும், வெறுங் கைகளைக் கொண்டு நாசியைத் துப்புரவு செய்தல், கைகுலுக்குல் போன்றவற்றைத் தவிர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.
“நீரிழிவு நோயாளிகள், ஆஸ்த்துமா நோயாளிகள், கர்ப்பிணிகள், சிறுவர்கள், வயோதிபர்கள், நோயெதிர்ப்புச் சக்தி குறைந்தோர், பொதுமக்கள் நெருக்கமாகக் கூடுமிடங்களைத் தவிர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
“குறிப்பாக, தேவை இல்லாதபோது சிறுவர்களை எக்காரணம் கொண்டும் வைத்தியசாலைகளுக்கு அழைத்து வர வேண்டாம். ஏனென்றால், இவர்கள் இலகுவில் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகலாம் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை விடுக்கப்படுகின்றது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
31 minute ago
1 hours ago
1 hours ago