2025 மே 01, வியாழக்கிழமை

கொள்ளையிட முயன்ற இளைஞர் கைது

Editorial   / 2020 ஜூன் 28 , பி.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதியில், வீதியால் நடந்து சென்ற இரு பெண்களின் சங்கிலியைக் கொள்ளையிட முயன்ற இளைஞனை, இன்று (28) கைதுசெய்துள்ளதாக, காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்ட இளைஞனிடமிருந்து சம்பவத்துக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளைக் கைப்பற்றியுள்ளதாகவும், பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

சில தினங்களின் முன்னர், ஆரையம்பதி  காளியம்மன் கோயில் வீதியால் மேற்படி இரு பெண்கள் நடந்து செல்கையில், மோட்டார் சைக்கிளில்  வந்த இளைஞர், பெண்ணின் கழுத்திலிருந்த சங்கிலியைக் கொள்ளையிட முயன்றுள்ளார்.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, சி.சி.டி.வி கமெராவின் உதவியுடன் மேற்படி இளைஞனை, நேற்றுக் கைதுசெய்துள்ள  காத்தான்குடி பொலிஸார்,  சந்தேகநபரை நீதிமன்றித்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .