2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கொவிட்-19 தடுப்பு முகாமிலிருந்து 34 பேர் குடும்பங்களுடன் இணைவு

எம்.எம்.அஹமட் அனாம்   / 2020 மார்ச் 25 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பனிச்சம்கேணி கொவிட்-19 தடுப்பு முகாமில், கடந்த 14 நாள்களாக மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டவர்கள், தொற்று இல்லாத நிலையில், அவர்களை அவர்களது குடும்பத்தாருடன் இணைக்கும் பணி இன்று (25) நடைபெற்றது.

இராணுவத்தினரின் பஸ் மூலமாக, பனிச்சம்கேணி கொவிட்-19 தடுப்பு முகாமில் இருந்து, ஒரு பஸ் மூலமாக 34 பேரும் இன்று காலை 07.00 மணியளவில் நீர்கொழும்பு, கொழும்பு போன்ற பிரதேசங்களுக்கு, பொலிஸ் பாதுகாப்புடன் இராணுவத்தினர் அழைத்து சென்றுள்ளனர்.

பணிச்சங்கேணி கொவிட் -19 தடுப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 38 பேரில் 34 பேர் இன்று விடுவிக்கப்பட்டதுடன், மீதமாக இருந்த நான்கு பேரும் புனானை தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X