Kogilavani / 2017 செப்டெம்பர் 01 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நெடுஞ்சேனை பன்சேனை கிராமத்தில், 2 இலட்சத்து 45 ஆயிரம் மீல்லிலீற்றர் கோடாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட மோசடி ஒழிப்புப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.ஐ.ரணதுங்க தெரிவித்தார்.
மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் யட்டவரயின் பணிப்புரையின் கீழ் நேற்று மாலை தகவலொன்றின் அடிப்டையில் குறித்த பகுதியிலுள்ள சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையத்தைச் சுற்றிவளைத்து தேடுதல் நடத்தியபோது பூமிக்கடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 12 பாரிய கலன்களில் அடைக்கப்பட்ட கோடாவுடன் இருவடன் கைது செய்யப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்ட கோடா மற்றும் சந்தேக நபர்கள் கொக்கட்டிச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக, மோசடி ஒழிப்பு பொலிஸ்பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்கள் களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
5 minute ago
14 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
14 minute ago
26 minute ago