Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2017 ஓகஸ்ட் 14 , பி.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமையின் காரணத்தாலேயே, ஜனநாயகப் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டதாக, கிழக்குப் பல்கலைக்கழக சகல மாணவர் ஒன்றியத்தின் தலைவர் சிரீனத் லியனாராச்சி தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நேற்று (13) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அச்சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, “5 கோரிக்கைகளை முன்வைத்து, கிழக்குப் பல்கலைக்கழக சகல மாணவர் ஒன்றியத்தால் பேராட்டத்தில் ஈடுபடப்படுகின்றது.
“பட்டபடிப்புக்கான சான்றிதழைத் தாமதிக்காமல் வழங்க வேண்டும், கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவைத் தாமதியாமல் கொடுக்க வேண்டும், மாணவர்களுக்கான விடுதி வசதிகள் வழங்கப்படல் வேண்டும், சி.சி.டி.வி கமெராக்களை அகற்ற வேண்டும், இடை நிறுத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக பல்லைக்ககழத்தில் அனுமதிக்க வேண்டும் ஆகியவையே எமது கோரிக்கைகளாகும்.
“எமது இந்தக் கோரிக்கைகள் நியாயமானதாகும். இவற்றுக்காக நாம் போராட்டங்களை நடத்தி வருகின்றோம்.
“கிழக்கு பலக்லைக்கழக மாணவர்களுக்கு விடுதி வசதிகள் வழங்கப்படுமென, எமக்கு வழங்கப்பட்ட உத்தரவாதம், மீறப்பட்டுள்ளது.
“பல்கலைக்கழகத்திலிருந்து 50 மாணவர்கள் இடை நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களை, உடனடியாக மீண்டும் பல்கலைக்கழகத்துக்குள் அனுமதிக்க வேண்டும்” என்றார்.
21 minute ago
43 minute ago
54 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
43 minute ago
54 minute ago
58 minute ago