2025 மே 12, திங்கட்கிழமை

குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 01 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்று பிரதேசத்தில் செங்கலடி -பதுளை வீதியை அண்மித்த கிராமங்களில் நிலவும் குடிநீர் பிரச்சினை தொடர்பில் நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இக்கிராமங்களில் நிலவும் குடிநீர் பிரச்சினையை விரைவில் தீர்த்துவைப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கும் கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு உன்னிச்சைக் குளத்திலிருந்து நீர் சுத்திகரித்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட  கிராமங்களின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல், அப்பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் இதனைக் கூறினார்.

இக்கலந்துரையாடலின்போது  பெண்; தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார வசதி, குடிநீர் வசதி, வீதிப் புனரமைப்பு, கிராம அபிவிருத்திச் சங்களுக்கு கதிரைகளின் தேவைப்பாடு உள்ளிட்டவை தொடர்பில் பொதுமக்களினால் முன்வைக்கப்பட்டன.

இங்கு மேலும் தெரிவித்த அவர், 'பெண்; தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தொழிற்கூடங்களை அமைப்பதற்கு புலம்பெயர் உறவுகள் உதவி செய்வதற்குத் தயாராகவுள்ளனர்.
 
கிராம அபிவிருத்திச் சங்கங்களுக்கும் கதிரைகள்; வழங்குவதற்கும் தீர்மானித்துள்ளேன்' என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X