2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ளுமாறு பணிப்பு

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 02 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரடியனாறு கற்பானைக்குள கிராமத்துக்கான நீர் விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை ஆராய்ந்து உடனடியாக அக்கிராம மக்களுக்கு நீர் விநியோகத்தை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு  உரிய அதிகாரிகளுக்கு மாவட்ட அரசாங்க அதிபர் பணித்துள்ளார்.

இக்கிராமத்தில் 400 குடும்பங்களுக்கு குழாய்நீர்  வழங்கும் வகையில் 7 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

இவ்வேலைத்திட்டத்தை மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் பார்வையிடச் சென்றிருந்தனர்.

இத்திட்டத்தின் கீழ் கிணறுகள் அமைக்கப்பட்டு 2 நீர்த்தாங்கிகளும் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், வீடுகளுக்கான குடிநீர் விநியோகத்துக்காக இணைப்பு வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நீர் விநியோகம் மேற்கொள்ளப்படவில்லை மேற்படி குழுவினர் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X