Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 02 , மு.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு, மண்முனை மேற்குப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கரடிப்பூவல், பாலக்காடு, முள்ளாமுனை, புதுமண்டபத்தடி, முருங்கையடிவாடி ஆகிய கிராமங்களில் குடிநீர் விநியோகத்துக்கான வேலைத்திட்டம் எதிர்வரும் வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.
கோறளைப்பற்று, கோறளைப்பற்று வடக்கு, மண்முனை மேற்கு, மண்முனை தென்மேற்கு, ஏறாவூர்ப்பற்று ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் குடிநீர் விநியோக வேலைத்திட்டத்துக்காக 100 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது. இதில் மண்முனை மேற்குப் பிரதேச செயலாளர் பிரிவில் கூடுதலாக 74.84 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி பிரதேச செயலாளர் பிரிவுகளில் பொதுக்கிணறுகள், குழாய்க்கிணறுகள் அமைத்தல் ஆகிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
மண்முனை மேற்குப் பிரதேச செயலாளர் பிரிவில் சமுர்த்திப் பயனாளிகள் 140 பேருக்கு குழாய் இணைப்பு வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கோறளைப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கிண்ணையடிக் கிராமத்தில் 89 குழாய்க்கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.
அவ்வாறே, கோறளைப்பற்று வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட புனானை கிழக்குக் கிராம அலுவலர் பிரிவில் சின்னப்புனானை, குகநேசபுரம் ஆகிய கிராமங்களிலும் கதிரவெளி கிராம அலுவலர் பிரிவில்; கல்லரிப்புக் கிராமத்திலும் மாங்கேணி தெற்குக் கிராம அலுவலர் பிரிவில் பிரம்மையடிமடுக் கிராமத்திலும் 4 கிணறுகள் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
55 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
7 hours ago