Suganthini Ratnam / 2016 மே 17 , மு.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ஜெயஸ்ரீராம்
மட்டக்களப்பு, கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குடும்பிமலையில் குளவிக் கொட்டுக்குள்ளான 33 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேற்படி பிரதேசத்தில் அமைந்துள்ள கண்ணகி அம்மன் கோவிலின் வருடாந்தத் திருவிழாவுக்குச்; திங்கட்கிழமை (16) சென்ற பக்தர்களே குளவிக் கொட்டுக்குள்ளாகினர்.
இவர்கள் உடனடியாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் நான்கு பேர்; மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் கோவில்த் திருவிழாவுக்கு கிரான், சந்திவெளி, திகிலிவெட்டை, கோராவெளி, பெண்டுகல்சேனை, முறக்கொட்டாஞ்சேனை ஆகிய கிராமங்களிலிருந்து பக்தர்கள் கலந்துகொள்வது வழக்கமாகும்.
1 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago