Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 30 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
தேசிய முதியோர் கொடிவாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் விசேட நிகழ்வுகள் நடைபெற்றன.
முதியோருக்கான தேசிய கொடிவாரத்தினை முன்னிட்டு மண்முனைப்பற்று பிரதேச முதியோர் சங்கங்களுக்கான கொடிகளை வழங்கும் நிகழ்வும் பிரதேச மட்ட சிரேஷ்;ட பிரஜைகளின் சமாஜத்தின் மகா சங்க கூட்டமும் இன்று மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது முதியோர் சங்கங்கள் எதிர்நோக்கும் இடர்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன், இந்நிகழ்வுக்கு முதியோர் சங்கங்களின் நிர்வாக உறுப்பினர்கள் கலந்துகொண்டதுடன், இதன்போது முதியோருக்கான தேசிய கொடிவாரத்தினை முன்னிட்டு முதியோர் நலன் தொடர்பான நிதி சேகரிப்புக்கான கொடிகள் இதன்போது சங்கங்களின் நிர்வாக உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வின்போது மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள முதியோர் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
56 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
7 hours ago