Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 ஏப்ரல் 08 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
நல்லதம்பி நித்தியானந்தன்
குளத்திலிருந்து வயலுக்கு நீர் பாய்ச்சுவதற்காக கிணற்றுக்குள் இறங்கி கற்களை அகற்ற முயற்சித்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சின்னத்தம்பி கணேசமூர்த்தி (வயது 41) என்ற குடும்பஸ்தர், நேற்று (07) உயிரிழந்துள்ளதாக, கொக்கட்டிச்சொலைப் பொலிஸார் தெரிவித்தனர்.
கிணற்றுக்குள் உயிரிழந்த நபரின் சடலத்தை வெளியில் எடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட கடும் பிரயத்தனத்தையடுத்து இன்று (8) சடலம் மீட்க்கப்பட்டது.
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரும்பண்ட குளத்திலிருந்து வயலுக்கு நீர் பாய்ச்சுவதற்காக, நீர் நிறைந்த துரிசுக் கிணற்றினுள் இறங்கி கீழ் இருந்த கற்களை அகற்றிக் கொண்டிருந்த வேளை துரிசுக் கதவு விழுந்ததன் காரணமாக குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக கொக்கட்டிச்சொலைப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி சண்முகநாதன் கணேசதாஸ் நேரில் சென்று பார்வையிட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை கொண்டு செல்வதற்கு கொக்கட்டிச்சோலை பொலிஸாருக்கு அனுமதி வழங்கினார்.
பிரேத பரிசோதனை முடிவடைந்த பின்னர் உறவினர்களிடம் சடத்தை கையளிப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
49 minute ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
6 hours ago