Kogilavani / 2016 ஜனவரி 05 , மு.ப. 03:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்
மட்டக்களப்பு- ஓட்டமாவடி, மாஞ்சோலை பதுரியாநகரில் உள்ள கேணிக்குள் தவறி விழுந்து, இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம், நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில், மீறாவோடை அல் ஹிதாயா வித்தியாலயத்தில் தரம் 08இல் கல்வி கற்று வந்த மன்சூர் முஹ்சீன் (வயது – 13) என்பவரும் கந்தளாய் சிறாஜியா குர்ஆன் கலாசாலையில் மார்க்க கல்வி பயின்று வந்த நாசர் பைனாஸ் (வயது – 15) என்பவருமே உயிரிழந்துள்ளனர்.
மீறாவோடை 4 எம்.பி.சி.எஸ்.வீதியைச் சேர்ந்த மேற்படி இருவரும் ஒரே குடுபம்த்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.
இருவரும் கேணிப்பகுதிக்கு விளையாடச் சென்ற போது, ஒருவர் தவறி கேணிக்குள் விழுந்துள்ளதுடன மற்றைய சிறுவன் காப்பாற்ற முனைந்த நிலையல் தவறி விழுந்துள்ளதாக தெரியவருகிறது.
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

8 hours ago
8 hours ago
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
15 Dec 2025