Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 19 , மு.ப. 05:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்,எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, வாகரைப் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட கேணி நகர் கிராமத்தில் காணப்படும் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கேணி நகர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் அழைப்பின் பேரில் மேற்படி கிராமத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (18) விஜயம் செய்த மாகாண சபை உறுப்பினர், அக்கிராமத்தில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் மக்களுடன் கலந்துரையாடினார்.
இதன்போது காணிகளுக்கு உறுதிப்பத்திரம் இல்லாமை, வாழ்வாதார உதவி மற்றும்; இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு, குடிநீர் உள்ளிட்ட பல பிரச்சினைகள் தொடர்பில் மாகாண சபை உறுப்பினருக்கு கேணிநகர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் அப்துல் ஹமீட் தெரியப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், இவற்றில் சில பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத் தருவதாக மாகாண சபை உறுப்பினர் உறுதியளித்துள்ளார்.
மேலும், குடிநீர் பற்றாக்குறை காரணமாக சிரமப்படுவதுடன், இங்குள்ள நீர்த்தாங்கிகளில் காணப்படும் நீர் மக்களின் பாவனைக்கு போதாமையாக உள்ளதாகவும் மாகாண சபை உறுப்பினரிடம் மக்கள் சுட்டிக்காட்டினர்.
இதனை அடுத்து, மேலதிகமாக 2 நீர்த்தாங்கிகளை வைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச செயலாளரிடம் மாகாண சபை உறுப்பினர் கேட்டுக்கொண்டமைக்கு அமைய அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அக்கிராமத்தில் வசிக்கும் மக்களின் வீடுகள், கிணறுகள், வீதிகள், உள்ளிட்டவற்றையும் மாகாண சபை உறுப்பினர் பார்வையிட்டார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago