Suganthini Ratnam / 2017 ஜனவரி 10 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்று மற்றும் ஏறாவூர் நகரம் பிரதேச செயலாளர் பிரிவுகளில் நிலவும் காணிப் பிணக்குகளைத் தீர்க்கும் இடம்பெயர் சேவை ஜனவரி 16ஆம் திகதிக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகம் தெரிவித்தது.
ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைக் கேட்போர் கூடத்தில் 16ஆம் திகதி காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணிவரை நடைபெறவுள்ள இச்சேவையின்போது, தங்களின் காணிப் பிணக்குகளை பொதுமக்கள் முன்வைத்து தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும்;;.
கடந்த கால யுத்தம் மற்றும் அதற்குப் பின்னரான அசாதாரண சூழ்நிலைகளின்போது, இவ்விரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் வசிக்கும் பொதுமக்கள் தங்களின் காணிப் பிரச்சினைகளுக்கு நீண்டகாலமாக முகங்கொடுத்து தீர்வின்றித் தடுமாறுவதனால், அவற்றுக்குத் தீர்வு காண்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் செயலகம் கூறியது.
30 minute ago
48 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
48 minute ago
1 hours ago
2 hours ago