Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Gavitha / 2015 நவம்பர் 06 , மு.ப. 08:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் ஆளணி மற்றும் வளப்பற்றாக்குறையை தீர்ப்பதற்காக, கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர், பிரதேச அரசியல் பிரமுகர்களை சந்தித்து காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் நடவடிக்கை எடுப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் உப தலைவர் எம்.ஐ.சுபைர் தெரிவித்தார்.
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள வளப்பற்றாக்குறை மற்றும் அங்கு நிலவிவரும் ஆளணி வெற்றிடம் என்பவை தொடர்பாக காத்தான்குடி மீடியா போரத்துக்கும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்துக்குமிடையேயான கலந்துரையாடலொன்று வியாழக்கிழமை (05) காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன அலுவலகத்தில் நடைபெற்றது.
காத்தான்குடி மீடியா போரத்தின் உறப்பினர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு கள விஜயம் செய்து அங்கு பெறப்பட்ட தகவல்களை தொகுத்த ஒரு ஆவணமும் இந்த சந்திப்பின் போது காத்தான்குடி மீடியா போரத்தினால் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டது.
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் நிலவும் ஆளணிப்பற்றாக்குறை மற்றும் வளப்பற்றாக்குறை அங்குள்ள பிரசவ விடுதி இயங்காமை, அதற்கான காரணங்கள் போன்ற விடயங்கள் தொடர்பாக இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டன.
காத்தான்குடி ஆதார வைத்தியசாலை கிழக்கு மாகாண சபையின் கீழ் வருவதால் இது தொடர்பாக விரைவில் கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் பிரதேச அரசியல் வாதிகள் மற்றும் சுகாதார துறையினரை சந்தித்து இவைகளை முன் வைத்து அங்கு நிலவும் குறைபாடுகளை தீர்;த்துக் கொள்ள நடவடிக்கை எடுப்பதென இங்கு தீர்மானிக்கப்பட்டதாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் உப தலைவர் எம்.ஐ.சுபைர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
59 minute ago
1 hours ago