2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

காத்தான்குடி தள வைத்தியசாலையில் மனநோய் சிகிச்சைப் பிரிவு

Suganthini Ratnam   / 2016 மே 04 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடி தள வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மனநோய் சிகிச்சைப் பிரிவு எதிர்வரும் 14ஆம் திகதி திறந்துவைக்கப்படவுள்ளது.   

23 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த சிகிச்சைப் பிரிவில், ஒரே தடவையில்  சுமார் 22 பேருக்கு சிகிச்சை அளிக்க முடியும்.

இந்த வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டு;ள்ள மனநோய் சிகிச்சைப் பிரிவுக் கட்டடத்தை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை (03) சென்று பார்வையிட்டனர்.

இதன் பின்னர் அங்கு நடைபெற்ற கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் கருத்துத் தெரிவிக்கையில், 'மனநோயாளிகளைப் பராமரிக்காது வீதிகளில் அலைய விடுவது மனிதாபிமானமற்ற செயல் என்பதுடன், அவர்களை சமூகத்திலிருந்து ஒருபோதும் ஒதுக்கக் கூடாது' என்றார்.

'போதைப்பொருள் பாவனையாலும்; மன நலம் பாதிக்கப்பட்டு வீதியில் அலைபவர்கள் எம்மத்தியில் உள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் அல்ல பரவலாக பல  ஊர்களிலும் மன நோயால் பாதிக்கப்படுவோரின்  எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன்,  ஒரு சில இடங்களில் இவர்கள் எவ்விதமான பராமரிப்பும் இன்றி அநாதரவாக கைவிடப்பட்ட நிலையில் வீதிகளில் அலைந்து திரிவது மனவேதனைக்குரிய விடயமாகும்' எனவும் அவர் மேலும் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X