2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

கோறளைப்பற்று பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டம்

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 29 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு, கோறளைப்பற்று பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கல்வி, சுகாதாரம், மீன்பிடி, சுற்றுலாத்துறை, தென்னை வளர்ப்பு, வீதி, குடிநீர் போன்ற பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டு அவற்றுக்கான தீர்வுகளும் எட்டப்பட்டன.

நேற்று வியாழக்கிழமை மாலை இந்தக் கூட்டம் பிரதேச அபிவிருத்தி குழு இணைத் தலைவர்களான பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஎஸ்.அமீர் அலி,  நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் 2016ஆம் ஆண்டு மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் 28 திட்டங்களுக்காக 45  இலட்சத்து 95 ரூபாய் ஒதுக்கியுள்ளனர். கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு 12 மில்லியன் ரூபாயும் வெள்ளப் பாதிப்பு வீட்டுக்கு முழுச்சேதத்துக்குள்ளான 206 வீடுகளில் ஒவ்வொரு வீடுகளுக்கும் ஒரு இலட்சம் ரூபாய் படி 206 இலட்சம் ரூபாயும் பகுதியளவான சேதத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் படி  85 வீடுகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.  

இங்கு  பிரதி அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவிக்கையில், 'பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கு அரசியல்வாதிகளுடன் இணைந்து அரசாங்க அதிகாரிகளும் உழைக்க வேண்டும். அப்போதே குறித்த பிரதேசம் அபிவிருத்தி அடையும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X