2021 மே 06, வியாழக்கிழமை

கொல்லப்பட்ட 27 கொக்குகளுடன் இருவர் கைது

Princiya Dixci   / 2016 மார்ச் 21 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவில் உள்ள குளங்களிலும் சதுப்பு நிலங்களிலும் இரைதேடிய நிலையில் 27 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொக்குகளைச் சுட்டுக்கொன்ற சந்தேகநபர்கள் இருவர், ஞாயிற்றுக்கிழமை (20) கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சந்தேக நபர்கள், நடமாடும் இடத்துக்குச்சென்ற பொலிஸார், சுடப்பட்டு இறந்து போன நிலையில் காணப்பட்ட 27 கொக்குகளை மீட்டதுடன், சந்தேகநபர்களையும் கைதுசெய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸார், பொதுமக்கள் அளிக்கும் தகவல்களின்படி இவ்வாறு கொக்குச் சுடுவதில் சந்தேகநபர்கள் தொடர்ந்து குழுவாக ஈடுபட்டு, கொக்கு இறைச்சி விற்பனை செய்து வருகின்றார்களா என்ற கோணத்திலும் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

வெளிநாட்டுப் பறவைகள் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சில காலம் தமது வாழ்விடங்களை அமைத்துக்கொள்கின்றன. பின்னர் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து குஞ்சுகளுடன் அவை அவுஸ்திரேலியா போன்ற தமது சொந்த நாட்டுக்குத் திரும்பி விடுவதாக விலங்கியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான பறவைகளையே சட்டவிரோத வேட்டையர்கள் சுட்டுப் புசிக்கின்றனர் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .