Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஒக்டோபர் 14 , பி.ப. 07:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 23,775 பயனாளிகளின் குடும்பங்களுக்கு நிதி மானியம் வழங்குவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஒரு குடும்பத்திற்கு 150,000 ரூபாய் வரை வழங்கக்கூடிய இந்த மானியம், வணிக அல்லது வேலைவாய்ப்புத் திட்டங்கள் மூலம் வறிய குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதரவளிக்க பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்தின் கீழ் தற்போது சலுகைகளைப் பெற்று வரும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த 1.2 மில்லியன் குடும்பங்களை வலுவூட்டும் பொறுப்பு சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இதன் முன்னோடித் திட்டங்கள் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் செயல்படுத்தப்படுகின்றன. R
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago