Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 30 , மு.ப. 07:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
காணாமல் ஆக்கப்பட்டோருக்காக அனைத்து மாவட்டங்களிலும் கிளை அலுவலகங்கள் திறக்கப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையத்தின் தலைவர் சபாரத்தினம் சிவயோகநாதன் வேண்டுகோள் விடுத்தார்.
காணாமல் ஆக்கப்பட்டோரை தேடித்தருமாறு கோரி மட்டக்களப்பு நகரிலுள்ள காந்தி பூங்காவுக்கு முன்பாக நேற்றுச் செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்புப் போராட்டத்தின்போதே, அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
மேலும், கணவன் மற்றும் பிள்ளைகளை இழந்து கஷ்டப்படும் உறவினர்களுக்கு உடனடி நிவாரணமாக வாழ்வாதாரத் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். நிலைமாறு கால நீதிப் பொறிமுறைகளை செவ்வனே செயற்படுத்துவதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago