Administrator / 2017 ஜனவரி 12 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
- கே.எல்.ரி.யுதாஜித்
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உயர்கல்வி நிறுவனங்களுடனான கல்விசார் இணைப்புக்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துணைவேந்தர் பேராசிரியர் த. ஜெயசிங்கம் அண்மையில் கோயம்பத்தூர் பாரதியார் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்களுக்கு விஜயம் செய்ததையடுத்து, கல்விசார் ஒத்துழைப்பு தொடர்பாக, மூன்று புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
கோயம்பத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைப்பாளராக திருமதி. பி. பிரதீஸ் (சிரேஸ்ட விரிவுரையாளர், திருகோணமலை வளாகம்), தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இணைப்பாளராக கலாநிதி ஞா. தில்லைநாதன் (சிரேஸ்டவிரிவுரையாளர், சமூகவியல்), அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இணைப்பாளராக த. பிரபாகரன் (சிரேஸ்ட விரிவுரையாளர், முகாமைத்துவம்) ஆகியோர் செயற்படுவார்கள்.
மேலும், தாய்லாந்திலுள்ள ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தினால் பட்ட மேற்படிப்பு நிறுவனமாக தாபிக்கப்பட்ட ஆசிய தொழில்நுட்ப நிறுவனத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றும் துணைவேந்தர் பேராசிரியர். த. ஜெயசிங்கத்தினால் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதன்படி, மாணவர் மற்றும் ஆள்வள பரிமாற்றம், பட்ட மேற்படிப்புக்கான உதவிகள், ஆய்வு மற்றும் இணைந்த நிகழ்சித்திட்டங்களில் சர்வதேச மாநாடுகள் மூலம் பரஸ்பரம் பங்கெடுத்தல், மேலும் அமையவிருக்கின்ற தொழில்நுட்ப பீடத்தினை விருத்தி செய்வதற்கான உதவிகள் ஆகியவை இப் புரிந்துணர்வு உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்ட அம்சங்களாகும்.
30 minute ago
48 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
48 minute ago
1 hours ago
2 hours ago