Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Sudharshini / 2015 டிசெம்பர் 19 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
பைஷல் இஸ்மாயில்
கிழக்கு மாகாணத்தில் பொருளாதார வளர்ச்சியை மையமாகக் கொண்டு சுமார் 500 முதலீட்டாளர்களை உள்வாங்கி, கைத்தொழில், விவசாயம், மீன்பிடி, கால்நடை, உல்லாசத்துறை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றை மாகாணத்தில் முன்னேற்றுவதற்கு சர்வதேச முதலீட்டாளர்களின் நேரடி முதலீட்டை கவர்ந்திழுப்பதற்கான சர்வதேச முதலீட்டு அரங்கம் ஒன்றை கிழக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தி வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் அடுத்த வருடம் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இரண்டாவது சர்வதேச முதலீட்டு அரங்கம் குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம், கொழும்பு உலக வர்த்தக மையத்தில் வெள்ளிக்கிழமை (18) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'கிழக்கு மாகாணத்தில் நடாத்தப்பட்ட முதலாவது சர்வதேச முதலீட்டு அரங்கம் மிகப் பிரமாண்டமான வெற்றியை தந்துள்ளது. இந்த முயற்சிக்கு முதலீட்டு சபை, ஏற்றுமதி அபிவிருத்தி சபை, கிழக்கு மாகாண சபை, பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு, இலங்கை சுங்கம், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை ஆகியன பூரண பங்களிப்புக்களை வழங்கி வருகின்றன.
குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர்களின் அனுசரணையும் பூரண ஒத்துழைப்புமே இந்த முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும்.
இந்த முதலீட்டு அரங்கமானது சர்வதேச முதலீட்டாளர்களையும் உள்ளூர் முதலீட்டாளர்களையும் கிழக்கு மாகாணத்தில் கவனம் செலுத்தி மாகாணத்தின் மூல வளங்களையும் மனித வலுவையும் முறையாகப் பயன்படுத்தி, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி மாகாணத்தை மேம்படுத்துவதே நோக்கமாகும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago