Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 01 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
கிழக்கு மாகாணத்தில் 68 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று உள்ளமை பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர்; கே.முருகானந்தன் தெரிவித்தார்.
உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்திலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் சமமான தொகையினருக்கு எச்.ஐ.வி. தொற்றுள்ளன. இதில்; இரு பாலாரும் அடங்குவதாகவும் அவர் கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், 'கிழக்கு மாகாணத்தில் இந்த எண்ணிக்கையை விட அதிகளவானோர் எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளாகியிருக்கலாமென்று சந்தேகிக்கப்படுகிறது.
இரத்தப் பரிசோதனை செய்வதன் மூலம் எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளானவர்களை கண்டுபிடிக்கமுடியும்.
எச்.ஐ.வி. எனும் விடயத்தில் அவதானத்துடன் இருக்க வேண்டும். இதில் விழிப்புடன் இருந்தால் எச்.ஐ.வி. ஏற்படாமல் தடுக்கமுடியும். இதற்கான வைத்திய சிகிச்சையும் வழங்கப்படுகின்றது.
மாவட்ட பாலியல் தொற்று எய்ட்ஸ் கட்டுப்பாட்டு பிரிவுக்குச் சென்று இதற்குச்; சிகிச்சை பெறமுடியும்.
எச்.ஐ.வி. தொற்றுக்கு சிகிச்சை பெறுவதற்காக கிழக்கு மாகாணத்தில் 04 கிளினிக் நிலையங்களை ஆரம்பிக்கவுள்ளதுடன், பிராந்திய சுகாதார பணிமணைகளை அண்டியதாக இந்த கிளினிக் நிலையங்கள் அமையவுள்ளன' என்றார்.
கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் இம்மாகாணத்தில் சுற்றுலா மையங்கள் இருப்பதால், எச்.ஐ.வி. தொற்று அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
32 minute ago
34 minute ago
53 minute ago