Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 14 , மு.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
நீண்ட வரட்சிக்குப் பின்னர் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை நேற்று வியாழக்கிழமை இரவு பரவலாகப் பெய்துள்ளது.
மட்டக்களப்பு நகரில் ஆகக்கூடிய மழை வீழ்ச்சியாக வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணிவரை 4.8 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்தார்.
கடும் வரட்சியாக அதிக வெப்ப நிலையுடன் காணப்பட்ட கிழக்கு மாகாணத்தில் இப்பொழுது குளிரான காலநிலை நிலவுகிறது.
இதேவேளை, தற்போதைய மழை வீழ்ச்சி பிற்பகலில் நாடு பூராகவும் எதிர்பார்க்கப்படுவதாகக் கூறியுள்ள வானிலை அவதான நிலையம், இடி மின்னல் பற்றி அவதானமாக இருக்குமாறும் எச்சரித்துள்ளது.
கடந்த இரண்டு மாதகாலமாக கிழக்கு மாகாணம் உட்பட நாட்டின் ஏனைய பகுதிகளிலும் நிலவிய அதிக வெப்ப நிலையின் காரணமான வரட்சியினால் குடிநீர்த் தட்டுப்பாடு, மரக்கறி உற்பத்திகள் வீழ்ச்சி, பால் கறக்க முடியாத நிலைமை, நோய்கள் என்பன போன்ற பாதிப்புக்கள் ஏற்பட்டிருந்தன.

4 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago