2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

சட்டதிட்டங்களை மீறுவோர்களுக்கு எதிராக நடவடிக்கை

Editorial   / 2020 ஏப்ரல் 20 , மு.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எச்.எம்.எம்.பர்ஸான்

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை பகுதிகளில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சில வர்த்தகர்கள் முறையற்ற ரீதியில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், பொருள்களை சீரான விலையில் விற்பனை செய்வதில்லை என்றும் தமக்குத் தொடராக முறைப்பாடுகள் கிடைக்கின்றனவென பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தெரிவித்தார்.

இது தொடர்பான முக்கியக் கலந்துரையாடல் ஒன்று ஞாயிற்றுக்கிழமை (19) ஓட்டமாவடி பிரதேச சபையில் தவிசாளர் ஐ.ரீ. அஸ்மி தலைமையில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் கிழக்கு மாகாண நுகர்வோர் அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் ஆர்.எப். அன்வர் சாதாத், பிரதேச சபையின் செயலாளர் எஸ்.எம். சிஹாப்தீன் மற்றும் ஓட்டமாவடி, மீராவோடை வர்த்தக சங்கத்தினர், வியாபாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அந்தவகையில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் காரணமாக மக்களின் நிலைமைகளைக் கருத்திற்கொண்டு திங்கட்கிழமை (20) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 22 வகையான மரக்கறிகளுக்கு விலைகளை நிர்ணயம் செய்வதோடு, இவ்விலைகளைப் பின்பற்றியே மரக்கறி வியாபாரிகள் விற்பனை செய்யவேண்டும் என்றும், மீறும்பட்சத்தில் நுகர்வோர் அதிகாரசபையினால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறித்த கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது.

அத்தோடு குறித்த பகுதிகளில் எதிர்வரும் சில தினங்களில் கோழி இறைச்சி விலையை நிர்ணயம் செய்து, அதற்கேற்ப கோழி இறைச்சிகளை விற்பனை செய்ய வேண்டும் எனவும், இப்பிரதேச மக்களின் நலன்களுக்காக பல காத்திரமான நடவடிக்கைகளை எதிர்காலத்தில் செயற்படுத்த உள்ளதாகவும் தவிசாளர் குறிப்பிட்டார்.

குறித்த கலந்துரையாடலில் நுகர்வோர் அதிகார சபையின் சட்டதிட்டங்களுக்கு அனைத்து வியாபாரிகளும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றும் தவறும் வியாபாரிகளுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X