2025 மே 06, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மருத மரக் குற்றிகள் கைப்பற்று

Editorial   / 2020 ஏப்ரல் 12 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம் 

கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ட சந்தியாற்று பகுதியில், சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட மருத மரக் குற்றிகள், வாழைச்சேனை விசேட அதிரடிப் படையினரால் வெள்ளிக்கிழமை மாலை கைப்பற்றப்பட்டுள்ளன. 

அக்குறானை பகுதியில் இருந்து ஓட்டமாவடி பிரதேசத்துக்கு சட்டவிரோதமான முறையில் மரங்கள் கொண்டுவரப்பட்ட நிலையில், வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ புலனாய்வு அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்ற வேளை, சந்தேகநபர்கள், மரக் குற்றிகளை சந்தியாற்றில் போட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.

இதில் ஏழ அடி நீளம் கொண்ட ஐந்து மருத மரக் குற்றிகள் கைப்பற்றப்பட்டு, கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபுக்கு தெரியப்படுத்தி, அவர் முன்னிலையில் குறித்த மரங்கள் வாழைச்சேனை விசேட அதிரடிப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 

இந்தக் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டு, தப்பியோடிய நபர்கள் தொடர்பான விசாரணைகளை இராணுவ புலனாய்வு அதிகாரிகளும் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X